கே ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில், கோவை மாவட்டத்தில் உள்ள கே ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே ஜி மருத்துவமனைத் தலைவர் பக்தவச்சலம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தனி பங்கை விகிப்பதாகவும் , எனவே அனைவரும் அவர்களின் அறப்பணியை மறவாமல் அவர்களுக்கு நன்றி கடனாக எப்பொழுதும் இருக்க வேண்டும் என கூறினார். மேலும் ஆசிரியரை போற்றி வருடந்தோறும் அவர்களுக்காக தனி நேரம் ஒதுக்கி அவர்களிடம் நேரத்தை கழிக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.