டெல்லிக் கேப்பிடல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடந்த பயங்கரமான கார் விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட காயங்களுக்கு ரிஷாப் பண்ட் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் எப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என்பது தெரியவில்லை இதையடுத்து இந்த ஆண்டு IPL மேட்ச்ல் ரிஷாப் பண்ட் பங்கேற்க வாய்ப்பில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டேவிட் வார்னர் இடம் ஒப்படைக்க டெல்லி அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டேவிட் வார்னர்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தி கோப்பையை வாங்கிய அனுபவம் இருப்பதால் கேப்டன் பதிவியை பற்றி, வரும் நாட்களில் டெல்லி அணி நிர்வாகம் வார்னரிடம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரிஷாப் பண்ட் சரியான நேரத்தில் உடல் தகுதி பெற முடியாவிட்டால், இந்த சீசனில் அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரிஷாப் பண்ட் இடத்தை நிரப்ப புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட மனிஷ் பாண்டேவை மாற்று வீரராக களமிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

– இ. ரா. சரவணா