லயன்ஸ் கிளப் சார்பில் அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர்

நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மண்டல தலைவர் மணிவண்ணன் தலைமையில் மண்டல மாநாடு நடைபெற்றது.

இதில் நீலகிரி தலையாட்டு மந்தில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. இன்டர்நேஷனல் இயக்குனர் மதனகோபால், மாவட்டத்தின் முதலாம் துணை ஆளுநர் ஜெயசேகரன், மக்கள் தொடர்பு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.