எஸ்.என்.எம்.வி கல்லூரி மாணவி குத்துச்சண்டை போட்டியில் சாதனை

பாரதியார் பல்கலைக்கழக அளவில் ஈரோடு வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இதில் கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.சி.ஏ இரண்டாமாண்டு மாணவி ஹேமலதா தங்கப்பதக்கமும், வணிகவியல் தொழில்நுட்பத்துறை முதலாமாண்டு மாணவி ரித்திகா வெண்கலப் பதக்கமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளைக் கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, பேராசிரியர்கள் என அனைவரும் வாழ்த்தி பாராட்டினர்.