சிறுதானியத்தின் நன்மைகளை அறியும் விதமாக கோவையில் கருத்தரங்கு

கோவையில் அகில இந்திய அளவிலான ‘சிறுதானிய கருத்தரங்கு 2023’ நடைபெற்றது. இந்திய அரசு, மில்லட் 2023 எனப்படும் இந்த சிறுதானிய கருத்தரங்கில், பல்வேறு அரசுத் துறைகளில் ஏழு காரணிகளை செயல்படுத்தியுள்ளது. இந்த ஏழு காரணிகளும் உற்பத்தி, நுண்ணுாட்டம் மற்றும் ஆரோக்கியத்துக்கான நன்மைகளை தருகிறது.

சிறுதானியத்தில் உள்ள நுண்ணுாட்டசத்து, அதன் நன்மைகள், சரியான உணவு விகிதாச்சாரம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த இந்த கருத்தரங்கு வாய்ப்பாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக் கழக எச்ஆர்டிசி இயக்குனர் பேராசிரியர் சுரேஷ்பாபு பேசியதாவது: இந்திய அரசும் சிறுதானியங்களை மறுமலர்ச்சி பெறச் செய்ய 2018ம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக அறிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தியாவின் கொள்கைகளை உருவாக்கி வரும் டாக்டர் சேவக் விஜய், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை சிறுதானிய சிறப்பு மையமாக மாற்ற உதவியமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மையத்தின் நோக்கம், சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதாக இருக்கும். எனினும், நாம் நமது செயல்திறன்கள், திட்டமிடல் போன்றவைகளையும், சிறுதானிய உற்பத்தியில் எதிர்நோக்கும் சவால்கள், நமக்கு உள்ள வலிமைகள், வாய்ப்புகள், பலவீனங்களையும் ஆராய வேண்டியுள்ளது. மிக உயர்ந்த இடத்தை அடைய உள்ள சவால்கள், வாய்ப்புகள் பற்றி அறிய வேண்டியுள்ளது என தெரிவித்தார்.