கே.எம்.சி.ஹெச் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திறமையும், ஒழுக்கமும் நம்மை மேலே உயர்த்தும்!

– நல்ல பழனிசாமி, தலைவர், கே.எம்.சி.ஹெச் 

கே.எம்.சி.ஹெச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஆர்.இ.டி நிர்வாக அறங்காவலர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார்.

உங்கள் துறையில் உயர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள்!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில்: மருத்துவத் துறையில் பாரா மெடிக்கல் படித்தவர்கள் ஒரு அடிப்படையான இடத்தைப் பெற்றுள்ளனர்.

நீங்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்று மருத்துவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். பாரா மெடிக்கல் இல்லாமல் மருத்துவமனை நடத்த முடியாது. அவர்களின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது.

நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டடு குணம் அடைந்ததில் பாரா மெடிக்கல் துறை சார்ந்தவர்களின் பங்கு அதிகம் உள்ளது.

ஆசிரியர்கள் உங்களை அழகாக செதுக்கி, இங்கிருந்து உங்கள் அனைவரையும் வெளி உலகத்திற்கு அனுப்புகின்றனர்.

நம் கல்லூரியில் இருந்து படித்து சென்றவர்கள் உலகம் முழுவதும் வேலை பார்த்து வருகின்றனர். நீங்களும் அப்படி ஆகவேண்டும்.

மக்களுக்கு நல்ல முறையில் உங்களது சேவைகளை வழங்கவேண்டும். திறமையும், ஒழுக்கமும் ஒருவரை மேலே உயர்த்தும். உங்கள் துறையில் உயர்ந்து நாட்டிற்கு சேவை செய்யவேண்டும்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் விஜயராகவன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

மருத்துவத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்!

அவர் தன் பட்டமளிப்பு உரையில் கூறியதாவது: பட்டம் பெற்றவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.

சுகாதாரம் சார்ந்த துறைகள் சற்று சிக்கலானது. தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அனைத்திலும் டிஜிட்டல் முறை பயன்பாடு வந்துவிட்டது.

சிடி, எம்.ஆர்.ஐ போன்ற இயந்திரங்களை மருத்துவர்களுக்கு உபயோகிக்க தெரியாது. அதற்கு என படித்தவர்களே அதை பயன்படுத்த முடியும். மருத்துவத்தில் நிறைய தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளும் வந்துவிட்டது.

ஒரு கிராமபுறத்தில் மருத்துவர்களின் சேவை கிடைப்பது அரிது. அங்கு பாரா மெடிக்கல் துறை சார்ந்தவர்களால் உதவமுடியும்.

மருத்துவத்தில் மிகவும் முக்கியமான இடத்தை செவிலியர்கள், மருந்தியல் துறை சார்ந்தவர்கள், பிஸியோதெரபிஸ்ட் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு தூண்களாக உள்ளனர். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை பல குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது. வெளிநாடுகளிலும் பல வேலைவாய்ப்பு உள்ளது.

ஒரு மருத்துவரை விட நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள் செவிலியர்களே. நோயாளியை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுதல், மனித மாண்புடன் நடந்து கொள்வது இன்றியமையாது.

பட்டமளிப்பு விழாவில் செவிலியர் கல்லூரி, பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 1200 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.

நிகழ்வில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி, கே.எம்.சி.ஆர்.இ.டி., யின் சி.இ.ஓ புவனேஷ்வரன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.