கோவையில் செட்டிநாடு திருவிழா துவக்கம்

கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழாவில் முன்னோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள், உணவுகள் என 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

கோவையை கொண்டாடும் விதமாக கோவை விழாவின் ஒரு பகுதியாக முதல் முறையாக கொடிசியா வளாகத்தில் செட்டிநாடு திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவை செட்டிநாடு குழும தலைவர் முத்தையா துவக்கி வைத்தார். இதில் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த பல பொருட்களின் அணிவகுப்பை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் செட்டிநாடு நகர கோயில்கள், கடைவீதி பொருட்கள், சுவர்களில் ஸ்டென்சில் ஆர்ட், செட்டிநாடு உணவு வகைகள், சிறுவயதில் விளையாடி மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்கள், முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை என 100 க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இதனை மக்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மனதிற்கு பிடித்ததை வாங்கி செல்லவும், உணவு வகைகள் சமைத்து கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.