இந்தியன் வங்கி சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி

இந்தியன் வங்கி சார்பில் வீடு மற்றும் கார் கடன் கண்காட்சி எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளர் கணேச ராமன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீநிவாசன், உதவி பொது மேலாளர் (எம்.எஸ்.எம்.இ. கடன் மையம்) கார்த்திகேயன், முதன்மை மேலாளர் பெனடிக்ட், ஹோட்டல் அக்ஷயம் உரிமையாளர் முருகானந்தம், எம்.ஆர்.கே.சிவில் கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர் மணிகண்டன், வி.ஜி.விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.