இந்தியா முழுவதும் 5,500 கி.மீ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணம்

எடெல்வீஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ் 3 வார உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணத்தை ஐதராபாத்தில் துவக்கியது. ‘ஜிந்தகி எக்ஸ்பிரஸ்’ என்னும் பெயரிலான இந்த மராத்தான், இந்தியா முழுவதும் 50 நகரங்களுக்கு, 5500 கிலோ மீட்டர் செல்லவிருக்கிறது. இந்தப் பயணம் வரும் 22 ஆம் தேதி போபாலில் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து 4 வது ஆண்டாக நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயணத்தில் மோகன் பவுண்டேஷனும் இணைந்துள்ளது.

இது குறித்து எடெல்வீஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுமித் ராய் கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாங்கள் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த ஆய்வுக்கான குழுவை அமைத்தோம். அது தனிப்பட்ட நம்பிக்கைகள் எப்படி ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்பது பற்றிய சில ஆச்சரியமான விஷயங்களை எங்கள் முன்வைத்தது. இதுவே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முயற்சிகளைத் தொடர்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது என்று தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்பதால் உடல் உறுப்பு தானம் செய்வதில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.