பிசியோதெரபி கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி துவக்கம்

கோவையில் பிசியோ தெரபி கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரி மற்றும் பிபிஜி காலேஜ் ஆப் பிசியோதெரபி இணைந்து நடத்தும் பிசியோதெரபி கர்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஆடுகளம் 2023 என்ற தலைப்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது.

இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தடகளம், கூடைப்பந்து, கபடி, கால்பந்து போன்ற 30க்கும் மேற்பட்ட போட்டிகள்நடைபெற்றது. தமிழகத்தில் 26 பிசியோதெரபி கல்லூரிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

வரும் 8ம் தேதி வரி நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.