சீனியர்களை ஓரம்கட்டிய சுவாரசியம்! இந்திய அணியில் இடம்பிடித்த IPL அதிரடி சிங்கம்

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து சஞ்சு சாம்ஸன் விலகியுள்ளதால், விதர்பாவை சேர்ந்த ஜிதேஷ் ஷர்மாவிற்கு இந்திய அணியில் முதல்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

IPL 2022 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜிதேஷ் சர்மா 10 இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்து 163 ஸ்ட்ரைக் ரேட் உடன் அதிரடியாக விளையாடினார். தவான், மயங்க் அகர்வால், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஷாருக் கான் போன்ற பல பிரபல வீரர்கள் இடம் பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் சர்மா தான் அதிக ஸ்ட்ரைக் ரேட்கள் கொண்டு இருந்தார்.

மேலும் இதன் பின்னர் நடைபெற்ற இந்திய அளவிலான சையத் முஷ்டாக் அலி கோப்பை T20 போட்டிகளிலும் தூள் கிளப்பினார். 10 இன்னிங்சில் 224 ரன்கள் 175 ஸ்ட்ரைக் ரேட் உடன் இரு முக்கியமான போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் ஷர்மாவை எப்படி விட்டு வைக்க முடியும்.

தினேஷ் கார்த்திக் மீது இந்திய தேர்வுக்குழுவிற்கு நம்பிக்கை போய்விட்டது. இதனால் அவருக்கு மாற்றாக தர்போது ஜிதேஷ் சர்மா தேர்வாகியுள்ளார். மேலும் இவர் விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் இந்திய அணிக்கு சேர்வது வசதியாகி விட்டது.

இஷான் கிஷன், ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் என இந்திய அணியின் அதிரடி பேட்டர்கள் பிளஸ் விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ஜிதேஷ் ஷர்மாவும் இணைத்துள்ளார். மேலும் IPL 2022 ஏலத்தில் ரூபாய் 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஜிதேஷ் சர்மா CSk விற்கு எதிராக தனது முதல் IPL ஆட்டத்தை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– இ. ரா. சரவணா