கே.பி.ஆர் கல்லூரியில் புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம், “இளைஞர்களுக்குத் தேவை அறிவின் பெருக்கமே..! உறவின் நெருக்கமே..!” எனும் தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமையுரை வழங்கினார். கல்லூரி செயலர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி பாலுசாமி, தமிழ்த்துறை தலைவர் முத்துக்குமாரவடிவேல்ம் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி நூலகர், பரமசிவம் பட்டிமன்ற நடுவராக கலந்து கொண்டு தீர்ப்பு வழங்கினார்.

இளைஞர்களுக்குத் தேவை அறிவின் பெருக்கமே..! என்ற அணியில் காவ்யா, தன்யா, யோகேஸ்குமார் ஆகியோர், இளைஞர்கள் வளர்ச்சிக்குத்தேவை அறிவு பெருக்கமே அதாவது நம்மை நமக்கு யார் என்று வெளிக்காட்டவும், காலத்தே பயிர் செய் எனும் நோக்கில் சங்கப்புலவர் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளோடு பெரிதும் உறுதுணையாவது அறிவின் பெருக்கமே என்று வாதிட்டனர்.

உறவின் நெருக்கமே அணியில் நிரஞ்சனி, மைதிலிதேவி, அனுகீர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டு மனிதன் தன்வாழ்க்கையில் வெற்றி பெற அறிவு மட்டும் போதாது. பெற்ற வெற்றியினைக் கொண்டாட உறவுகள் இருந்தால் தான் சிறப்பு அதுவே நம் வெற்றிக்கான பாலம் என்று கருத்துக்களை முன் வைத்தனர்.

மாணவர் தம் கருத்துக்களை ஊக்கப்படுத்தி நடுவர் “இளைஞர்களுக்குத் தேவை உறவின் நெருக்கமே“ என்று தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவர்கள், போராசிரியர்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.