வேளாண் பல்கலை பண்ணைத் தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இவ்விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.