பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 11705 காலியிடங்கள்

டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 11705 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் ரூ.16,400 – 40,500.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியான பின்னர், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.