கோவையில் சிறு, குறு தொழில் வளர்ச்சி மாநாடு 8 ம் தேதி துவக்கம்

லகு உத்யோக் பாரதி என்ற அமைப்பின் சார்பில் ‘வளர்ச்சிக்கான மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான தென் மண்டல அளவிலான மாநாடு கோவையில் வரும் 8 ஆம் தேதி லீ மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.

இம்மாநாட்டை, பாராளுமன்ற விவகாரம் மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த தொழில்துறையினர் பங்கேற்கின்றனர். மேலும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா சிறப்புரை ஆற்ற உள்ளார்.