இந்துஸ்தான் கல்லூரியில் சமூக பணியாளர்கள் மன்றம் துவக்க விழா

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக பணியாளர்கள் மன்றத்தின் துவக்க விழாவினை கோவை சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மன்றத்தின் செயலாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி வரவேற்புரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மன்றத்தின் தலைவர் மற்றும் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தலைவர் கவிதாசன் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் சமூகப் பணியில் முதுகலை பட்டம் படிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சமூக பணித் துறையினர், சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் பற்றி விரிவான உரை அளித்தார். மேலும் மன்றத்தின் நோக்கங்களை விளக்கி கூறினார்.

இதை தொடர்ந்து மதுரை இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் மேனாள் பேராசிரியர் ரங்கசாமி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறைத் தலைவர் லவ்லினா லிட்டில் ஃப்ளவர் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சுதாகர் நன்றியுரையாற்றினார். இதில் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் தலைவர் புனிதா, கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்திருந்த சமூக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.