பி.எஸ்.ஜி அறக்கட்டளை நடத்தும் காதம்பரி இசைக்கச்சேரி ஜன.,5 துவக்கம்

கோவை பி.எஸ்.ஜி அறக்கட்டளை நடத்தும் காதம்பரி 2023 இசைக்கச்சேரி விழா வரும் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கி 8 ஆம் தேதி வரை பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐ.எம்.எஸ்.ஆர் ஆடிட்டோரிய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியில் திரை ராக கதம்பம் எனும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய திரைப்பட பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொள்கிறார்.

இரண்டாம் நாள் ‘இதய ராகலாயம்’ என்ற நிகழ்ச்சியில், கடம் கார்த்திக்கின் இசை கச்சேரியில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து மூன்றாம் நாள் நடைபெறும் ஜன்னல் ஓரப்பயணம் நிகழ்வில், சிக்கில் குருசரண் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நான்காம் நாள் முழுவதும் கர்நாடக இசை கச்சேரி மற்றும் யுவா கலா ரத்னா விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமளம் பத்மநாபன் பங்கேற்கிறார்.

ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.