பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டிற்கான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12 ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும். நடப்பாண்டுக்கான, இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது.

நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.