பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் உள்ளதோ அதே தொலைவில் அமைந்துள்ள புதிய கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது சூரியனுடன் ஒப்பிடும் போது, அக்கிரகத்தின் சூரியன் 7.8% அளவில் சிறியதாகவே உள்ளது. 13,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளில், மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் இது ப்ளூட்டோவை விட குளிர்ச்சியான ‛ஐஸ்பால் கிரகம்’ எனவும் நாசா தெரிவித்துள்ளது.