காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் அதாவது நேற்றிரவு, எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் வேடம் தரித்து) மோகனாவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் எம்பெருமான் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வெளியேறி, திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 30 சமூக பந்தல்களில் நின்று அச்சமுதாய மக்களின் சிறப்பு பூஜைக்கு பின்னர் மீண்டும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.