உலகின் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வாணவேடிக்கையுடன் கொண்டாடி வரவேற்றனர்.

உலகின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது நியூசிலாந்து நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர்.