மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜியில் தலைமையில் இன்று நடைபெற்றது.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளதோடு, மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.