பொது கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரித்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு பணியின் போது, துணை மேயர் வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாநகரப்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.