புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம்

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் எதிர்ப்புறம் சுமார் 3.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்து நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கட்டிடத்தை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்தியநாராயணன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உட்பட தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.