மூன்று உலகக் கோப்பையை வென்ற ஒரே நாயகன்

பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!

மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை தெரிந்து கொள்ளலாம்.

எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.

பிரேசிலில் உள்ள சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சு விட்டார். ‘கால்பந்து பேரரசர்’ பீலே தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

பிரேசில் ஜாம்பவான் மரணமடைந்ததையடுத்து கால்பந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

15 வயதில் சாண்டோஸ் அணிக்காக விளையாடத் தொடங்கி 17 வயதில் உலகக் கோப்பையை வென்றார். 1969 இல், பீலே விளையாடுவதைப் பார்ப்பதற்காக நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் ஓரிரு நாட்கள் நிறுத்தப்பட்டது. மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை  பார்க்கலாம்.

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரர் பீலே. பீலே 1958 மற்றும் 1962 இல் தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார். பின்னர் 1970ல் உலகக் கோப்பை கோப்பை மீண்டும் பீலேவின் கைகளில் வந்தது.

இதையடுத்து மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற மிகப்பெரிய பிம்பம் பீலேவுக்கு கிடைத்தது. தற்போது வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 20 வீரர்கள் 2 முறை கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் மூன்றாவது முறை வென்றதில்லை.