பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், பொங்கல் தொகுப்பி உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியர்களே சாரும். ஜனவரி 9 ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்க வேண்டும்.

பச்சரிசி, சர்க்கரை உரிய தரத்துடன் இருப்பதை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.