வியோம் விமான பயிற்சி நிலையம் சார்பில் ‘பிளை அவார்ட்ஸ்’

கோவை அவிநாசி சாலை விமான நிலையம் அருகே செயல்பட்டு வரும் “வியோம்” பயிற்சி நிலையம், விமானத்தில் பணிபுரியும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் “பாரத் சேவாக் சமாஜ்’ன் கீழ் செயல்படுகிறது.

இந்த பயிற்சி நிலையம் சார்பில் “பிளை அவார்ட்ஸ்” என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

பாரத் சேவாக் சமாஜ் விருதுகளை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், பெண்கள் உடற்பயிற்சி மைய நிறுவனர் டாக்டர் ஜெயா மகேஷ், பயர்பேட் இன்ஸ்டியூட் பேராசிரியர் கருப்புசாமி, பாரதியார் யூனிவர்சிட்டி சிண்டிகேட் மெம்பர் டாக்டர் ராஜசேகர், ஜீவ சாந்தி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சலீம், அரசியல் பிரமுகர் கதிர், ராணுவ அதிகாரி ரீட்டா, ஆசிரியர் லீலாவதி, சமூக ஆர்வலர்கள் கிருஷ்டினா ஜோசப், பிரியங்கா ஜோசப் ஆகியோர் பெற்றனர்.

இந்த விழாவில் வியோம் பயிற்சி நிலைய இயக்குனர் அஸ்ரிதா ரவீந்திரன் மற்றும் சண்முகப்பிரியா உள்ளிட்ட ஏராளமான பயிற்சி மைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.