கே.பி.ஆர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் செயலாளரும் ஆலோசகருமான ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஆங்கிலத் துறையின் உதவிப்பேராசிரியரும் தலைவருமான விஜயகுமார் வரவேற்றார். கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்துமஸ் நடனம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து பரிசுகளை வழங்கி விழாவை கொண்டாடினர். இதில் சுமார் 100 மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.