சமூக முன்னேற்றத்திற்கு உதவும் டாடா எலக்ட்ரானிக்ஸ்

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சமூக முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் வகையில் தான் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிகழ்வு ஒன்றில் எடுத்துரைத்தது.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.பி. முனிசாமி, டி. ராமச்சந்திரன், ஒய்.பிரகாஷ், கே. அசோக்குமார், டி.எம். தமிழ்ச்செல்வம், டி.மதியழகன், ஓசூர் மேயர் சத்தியா, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டை சேர்ந்த ஏர்முனை விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புடன் இணைந்து, தனது நிறுவனத்திற்குள் பயன்படுத்துவதற்கு தேவையான காய்கறிகளை கொள்முதல் செய்துவருகிறது.

மேலும், அனைத்து மகளிர் பால் கூட்டுறவு நிறுவனத்தையும் அமைத்துள்ளது, இந்த முயற்சிகளின் மூலம் இப்பகுதிகளில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, உள்ளூரை சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதன் மூலம் அவர்களது வாழ்வை மேம்படுத்த ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

நிகழ்வில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் செய்தித் தொடர்பாளர்: எங்கள் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களையும் பிரதிநிதிக்கும் வகையில் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்களான பாரதியார் பல்கலைக்கழகம், விஐடி வேலூர் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என இந்த மூன்று பல்கலைகழங்களுடன் இணைந்து தரமான உயர்கல்வி திட்டங்களை உருவாக்கியுள்ளது என்றார்.