கோவை – தன்பாத் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கிழக்கு மத்திய ரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், சம்பல்பூா், ரூா்கேலா, ராஞ்சி வழியாக நாளை மறுநாள் (29-ந் தேதி) இரவு 10 மணியளவில் தன்பாத்தை சென்றடைகிறது.

12 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், 3 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் கொண்ட இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியதாக என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.