வைட்டமின் மாத்திரை யார் எடுக்கவேண்டும் ?

பொதுவாக, உடலில் தேவையான நுண் சத்துகள் குறைந்த அளவில் இருக்கும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வைட்டமின் மாத்திரைகளை நாமாகவே எடுத்துக்கொள்வதால் நம் உடலில் பலவிதமான உபாதைகள் ஏற்படும்.

தினமும் நீங்களாகவே ஒரு வைட்டமின் அளவை உங்கள் உடலில் கூட்டிக்கொண்டே வந்தால், அதனால் பல தீங்குகள் ஏற்படும். ஒவ்வொரு வைட்டமின் அளவை பொறுத்தும் அந்த பாதிப்பு வேறுபடும்.

 யார் எடுத்துக்கொள்ளவேண்டும்

புற்றுநோய் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள், கர்பிணிகள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.

இதுபோன்ற தனிக் கவனம் தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள நுண்சத்துகளை தாண்டி வைட்டமின்கள் தேவைப்படும் என்பதால், மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

கர்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஒரு ஆரோக்கியமான நபர் ஒருவர், தனது வாழ்நாளை நீட்டிக்கவேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரியல்ல.

 

– பா. கோமதி தேவி