மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம்? – அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 31 வரை மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1. 40 கோடி பேர் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிடம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், வரும் டிச 31ம் தேதியுடன் அவகாசம் முடிவதால் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும். அவகாசத்தை நீட்டிப்பது பற்றி 2 நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.