தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும், பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உயிர்த் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளும் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் பயிற்சி ஆகிய வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டில் இணைந்து செயல்பட இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், பதிவாளர் தமிழ்வேந்தன், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சார்பில் மீனா ஆகியோர், வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.