ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கரன்..!

ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது .

கொச்சி, 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது.

இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

ரசிகர்கள்  மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரண் பெயர் எப்போது வரும் என அணிகள் காத்திருந்தன. அவரின் பெயர் வந்ததும்  மும்பை, சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சாம்கரணை எடுக்க ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தபோது பஞ்சாப் அணியும் போட்டியில் இறங்கியது .

இதனால் போட்டி மிகவும் கடுமையானது. இறுதியாக 18.50 கோடிக்கு சாம் கரணை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.  இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கு சாம் கரன் ஆனார்.