வேளாண்மை பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “Build Back Wiser-Engineer the Future Agriculture” என்ற தலைப்பில் அக்ரிடெக் மனிஃபெஸ்ட் 22 என்னும் தேசிய கருத்தரங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

பொறியியல் துறையில் உள்ள 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தொழில்முனைவோர்கள், நிறுவனதாரர்கள், விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேளாண்மை மற்றும் அதன் முன்னேற்றத்தைப் பற்றி ஆலோசனை செய்வது மற்றும் கருத்துகளை பரிமாறுவதன் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையில் முன்னேற்றத்தைக் காண இந்நிகழ்வு ஒரு அடித்தளமாக திகழ்ந்தது. மேலும் இக்கருத்தரங்கத்தின் ஆய்வுக் கட்டுரை நுால் வெளியிடப்பட்டது.

இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார். M/s Leggo Mobility நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் இணைநிறுவனர் ராஜகோபால் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார்.