மாணவர்களுக்கு சிக்கல்..! ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு..!

தமிழ்நாடு மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேஇஇ விண்ணப்ப பதிவில், தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வை எழுதும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.