கங்கா நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கு ஏற்றும் நிகழ்வு புதன் கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சிறப்பு விருந்தினராகவும், திருச்சூர் ஜூபிலி மிஷன் நர்சிங் கல்லூரி முதல்வர் எஞ்சலா ஞானதுறை கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு 700 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் கங்கா மருத்துவமனையின் நிறுவனர் சண்முகநாதன், இயக்குனர்கள் ராஜ சபாபதி, ராஜசேகரன், கங்கா இனஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்ஸின் அறங்காவலர் ரமா ராஜசேகரன், கங்கா மருத்துவமனையின் கல்வி இயக்குனர் பாலவேங்கட சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான், செவிலியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.