
கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் அண்ணாமலை மேடையில் பேசியதாவது: திமுக வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன்.
ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். 2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடமால் செய்ததோ அதே போல் மீண்டும் நிகழும். பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு வெப்சைட் அப்ளிகேஷன் தயாராகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். ஊழலைப் பற்றி பேச தராதரம் வேண்டும்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் 25 எம்பிகள் வாங்க ரபேல் வாட்ச்சும் உழைக்கும். 2024 இல் திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடக்கும் எனப் பேசினார்.