இழப்பீடு வழங்காததால் கோவையில் அரசு பஸ் ஜப்தி

கோவையில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்த அதிகாரிகள் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். கடந்த 2016ல், அரசு பேருந்து மோதி பலியானார். விபத்து இழப்பீடு வழங்க கோரி, அவரது மனைவி ஜெயந்தி, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 2019ல் உத்தரவிட்டது ஆனால், வட்டியுடன் சேர்த்து 24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காமல், அரசு போக்குவரத்து கழகம் தாமதித்து வந்தது.

அதனை நிறைவேற்ற கோரி மீண்டும் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்,

அதன்படி, கோவை – சென்னை செல்லும் அரசு விரைவு மிதவை பேருந்தை நேற்று ஜப்தி செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.