புரோசோன் மாலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் துவக்கம்

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் வரும் 2023 ஜனவரி 1-ம் தேதி வரை ஜாய் ஆஃப் ஜிங்கிள் என்ற பெயரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனையுடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி ஆகியோர் கூறியதாவது: ஆண்டு முழுவதும் கோவை மக்களை மகிழ்விக்க பல விற்பனைகளை புரோசோன் மால் வழங்கி வருகின்றது. இந்த ஆண்டின் இறுதி சலுகை விற்பனையாக வரும் 2023 ஜனவரி 1-ம் தேதி வரை “ஜாய் ஆஃப் ஜிங்கிள்” என்ற பெயரில் “கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு” விற்பனையும் அத்துடன் வாடிக்கையாள்களை மகிழ்விக்க பலவிதமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

நாளை (21.12.2022) புதன்கிழமை தி பீட்லெஸ் – ராக் பாண்டு நிகழ்ச்சியும், 22 முதல் 25-ம் தேதி வரை ஜாய் ஆஃப் கிவிங் என்ற பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், 23-ம் தேதி ரேடியோ சிட்டி சூப்பர் சிங்கர் இறுதி சுற்றும், 24-ம் தேதி கிறிஸ்துமஸ் காரல் பேண்டு நிகழ்ச்சியும், 25-ம் தேதி குழந்தைகள் நிகச்சியாக கிட்ஸ் சான்டா பார்டியும், 25-ம் தேதி டிஜெ வினுஸின் லைவ் பாண்டு நிகழ்ச்சியும், 25 மற்றும் 26 – ம் தேதிகளில் சான்டா ரைட் நிகழ்ச்சியும், 22 முதல் 25 வரை புகழ்பெற்ற நிறுவனங்களின் சார்பில் கேக்ஸ் மற்றும் பேக்ஸ் கண்காட்சி அரங்குகளும், 27-;ம் தேதி குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் பங்குபெறும் மாம் அண்டு மி என்ற ஆடை அலங்கார அணிவகுப்பும், 2-ம் தேதி 1 நிமிட புகழ் என்ற நிகழ்ச்சியும் தொடர்ந்து 31-ம் தேதி சனிக்கிழமை புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பங்குபெறும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 2,999/- க்கு பொருட்கள் வாங்கும் போது பம்பர் பரிசும், ஒவ்வொரு நாளும் அதிக தொகைக்கு பொருட்கள் வாங்கினால் உறுதியான பரிசுகள் கிடைக்கும். புரோசோன் மாலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடி தர உள்ளார்கள் எனக் கூறினர்.