தைராய்டு புற்றுநோய் எளிதில் முழுவதுமாக குணப்படுத்தக் கூடியதே!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தைராய்டு புற்றுநோய்க்கான இலவச ஆலோசனை முகாம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 2மணி வரை நடைபெறுகிறது.

தைராய்டு புற்றுநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:

தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ளது. தைராய்டு ஹார்மோன் (T3, T4) நமது உடலுக்குத் தேவையானது. தைராய்டு வீக்கம் என்பதை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தைராய்டு அதிகமாக வேலை செய்வது (Hyper Thyroid), வேலை செய்யாமல் போவது (hypothyroid) மற்றும் தைராய்டு புற்றுநோய் கட்டி (nodule). இதில் முதல் இரண்டும் புற்றுநோய் வகையை சேர்ந்தது அல்ல.

தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனே மருத்துவர் ஆலோசனை பெற்று, அல்ட்ராசவுண்ட் (USG Thyroid) பரிசோதனை செய்து அந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா எனக் கண்டறியவேண்டும். அதன்பிறகு புற்று நோய் கட்டி என்றால் அதில் ஊசி போட்டு (FNAC) அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். சாதாரண கட்டி என்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை யூ.எஸ்.ஜி ஸ்கேன் செய்து அது அளவு அதிகமாகிறதா அல்லது புற்றுநோயாக மாறுகிறதா என பரிசோதனை செய்யவேண்டும்.

புற்றுநோய் என உறுதிப்படுத்திய பிறகு, தைராய்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகி, தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்ற வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று, நான்கு வாரங்களுக்குப் பிறகு கழுத்தில் மீதம் இருக்கும் தைராய்டு அணுக்களையும் வேறு எங்காவது பரவியுள்ளதா எனக் கண்டறியவேண்டும். இதற்கு நியூக்ளியர் அயோடின் – 131 ஸ்கேன் பரிந்துரைக்கப்படும். மேலும் S.TSH மற்றும் S. Thyroglobulin என இரண்டு ரத்த பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும்.

மிச்சமிருக்கும் தைராய்டு அணுக்களை அழிக்க அயோடின் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தனிப்பிரிவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு முன்பு மூன்று வாரங்களுக்கு தைராய்டு மாத்திரை மற்றும் அயோடின் சத்துள்ள உணவுகளை (கடல் உணவு, முட்டை, பால், அயோடின் உப்பு) எடுத்துக்கொள்ளக் கூடாது.

அயோடின் சிகிச்சைக்கு பின்பு வீட்டிற்கு சென்றவுடன், ஒருவாரம் தனியறையில் தங்கவேண்டும். முக்கியமாக சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் அருகில் செல்லக் கூடாது, இது பரவக்கூடிய நோய் அல்ல. அயோடின் சிகிச்சை முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு நோயாளிகளின் அருகில் செல்லலாம். உடன் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சிகிச்சை முடிந்தபிறகு வாழ்நாள் முழுவதும் தைராய்டு மாத்திரையை காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு தைராய்டு மாத்திரையை ஒரு மாதத்திற்கு நிறுத்திய பிறகு S.TSH, S.Thyroglobulin, அயோடின் ஸ்கேன் செய்து முழுவதும் அழிந்துவிட்டதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். பிறகு வருடம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தைராய்டு புற்றுநோய் என்பது ஒரு எளிதான மற்றும் குணப்படுத்தக் கூடிய புற்றுநோய். அதற்கு அறுவை சிகிச்சை மற்றும் அயோடின் – 131 சிகிச்சை வசதி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உள்ளது.

தற்பொழுது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடைபெற்று வரும் தைராய்டு புற்றுநோய்க்கான இலவச ஆலோசனை முகாமில் USG Thyroid, FNAC, S.TSH மற்றும் அயோடின் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் சலுகைக் கட்டணங்களில் அளிக்கப்படுகின்றன. தைராய்டு புற்று நோயாளிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 87548 87568