சிறந்த கல்வி நிறுவனமாக கோவை இந்துஸ்தான் கல்வி நிறுவனம் தேர்வு

டைம்ஸ் பிசினஸ் 2022 ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில், பொறியியல் கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை தமிழ்நாடு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையனுக்கு வழங்கினார்.

புத்தக படிப்பினை மட்டும் பெற்று வேலைக்கு செல்லும் மாணவர்களின் நடைமுறை அசௌகரியங்களை களையும் வண்ணம் இந்த கல்லூரியில் அளிக்கப்படும் தொழில் சார்ந்த பல்வேறு பயிற்ச்சிகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயா, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் நடராஜன், கட்டிடக்கலை கல்லுரி முதல்வர் சுரேஷ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.