சூப்பர் மூன் எப்போது காணலாம்?

நிலவை ரசிக்கும் மனநிலையில் இருக்கும்போது அது சூப்பராக உள்ளது என்று நாம் கூறுவோம்.

நீங்கள் எப்போது சூப்பர் மூனை காணலாம் என்று தெரிந்துகொள்ளும் முன்பு சூப்பர் மூன் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்

சூப்பர் மூன் என்றால் என்ன?

நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் அதாவது பெருநிலவு எனப்படுகிறது.

நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, ஒரு புள்ளியில் நிலவு பூமிக்கு மிக அருகிலும், அதை பெரிஜீ (perigee) என்றும் இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று லட்சத்து மூன்றாயிரத்து முந்நூறு கிலோமீட்டர்கள் (363,300 kilometers) தொலைவில் உள்ளது.

நீள்வட்டப்பாதையின் மிக தொலைதூர புள்ளி என்பது அப்போஜீ (apogee) என்று அழைக்கப்படும். இது பூமியில் இருந்து சராசரியாக நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் (405,500 kilometers) தொலைவில் உள்ளது.

பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும் இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கிறோம்.

சூப்பர் மூனை எப்போது காணலாம்?

ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை சூப்பர்மூன் தோற்றமளிக்கும். சூப்பர்மூனை பார்வையின் மூலம் வேறுபடுத்தி பார்ப்பது கடினமானது. ஆனால், அது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலவு பூமிக்கும் மிக அருகில் வரும் போது வழக்கத்தை விட அதிகமான கடல் அலைகள் ஏற்படும்.

மிக நெருக்கமான புள்ளியில் காட்சியளிக்கும் முழு நிலவு, ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுகிறது.