52,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘அவதார் 2’

அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் அனைவரையும் கவர்ந்தது.
25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது.

தற்போது 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 52,000-த்திற்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.