
சீசன் 5 இல் முதல் முறையாக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி. கடந்த 4 சீசன்களில் விளையாடிய 88 ஆட்டங்களில் 20 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது.
புரோ கபடி வரலாற்றிலேயே முதன் முறையாக அரையிறுதி சுற்றில் தமிழ் தலைவாஸ் களமிறங்க இருக்கிறது. .சாகர் காயம், பயிற்சியாளர் மாற்றிய பிறகு தமிழ் தலைவாஸ் அணிக்கு பயிற்சியாளர் அசன் குமார் .
அசன் குமார் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகள், 1 டை என்ற தொடக்கத்தில் புள்ளிப்பட்டியலில் 11 ஆவது இடத்திலேயே இருந்தது.
பயிற்சியாளர் அசன் குமார்:
61 வயதான அசன் ஹரியானா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் அசன். இவர் ஒரு பயிற்சியாளர் மட்டுமில்லை. அவர் ஒரு கபடி வீரரும்.
ஈரான் மற்றும் தென் கொரியா அணிகளின் பயிற்சியாளராக இருந்து பல சம்பவங்களை செய்திருக்கிறார். அசன் பயிற்சியின் கீழ் இந்த இரு அணிகளும் இந்தியாவை தோற்கடித்திருக்கின்றனர். இந்திய கபடி அணியின் கேப்டனாகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். 1990 ஆசிய விளையாட்டில் அசனின் தலைமையில் தங்க பதக்கமும் பெற்று கொடுத்தார்.
தமிழ் தலைவாஸும் அசன் குமாரும்:
தொடர் வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆஃப்க்கு நுழைய முடியும் என்ற சூழலில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார் அசன் குமார். பவன் குமார் அணியில் இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களால் முடியும் என ஒவ்வொரு இளம் வீரர்களையும் மனதளவில் திடப்படுத்தினார்.
தனிப்பட்ட வீரர்களை நம்பியிராமல் ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் அணிக்கு ஊக்கமளித்தார்.
வீரர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி 3 ரெய்டர்கள் 4 டிஃபென்டர்கள் என வலுவான ஸ்டார்டிங் 7 ஐ கட்டமைத்தார். பயிற்சியாளராக பொறுப்பேற்று 17 ஆட்டங்களில் 10 வெற்றிகள், 4 தோல்வி, 3 டை என தமிழ் தலைவாஸ் இதுவரை காணாத ரிசல்ட்டை எட்டி முதல் முறையாக பிளே ஆப் க்குள் அசன் குமார் தலைமையில் நுழைந்தனர்.
பிளே ஆஃப் சுற்று வரை யாரும் எதிர்பார்த்திராத தமிழ் தலைவாஸ் அணியை கெத்தாக அரையிறுதி சுற்று வரை அழைத்து வந்து இருக்கிறார் அசன் குமார். அசன் விதைத்த இந்த இளம் விதைகள் தமிழ் தலைவாஸுக்கு நாளை பல வெற்றிகளை கொடுக்கும்!