எஸ்.பி.ஐ சார்பில் கடன் வழங்கும் முகாம்

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக சிறு, குறு தொழில், மகளிர் உதவி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மாபெரும் கடன் வழங்கும் முகாம் ரயில் நிலையம் அருகில் எஸ்.பி.ஐ வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

டிசம்பர் 15 மற்றும் 16-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் துணை பொது மேலாளர் கோவை நிர்வாக அலுவலகம் திலீப் சிங்க் யாதவ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பிராந்திய மேலாளர்கள் இன்பரசு, ஷிபுதாமஸ், முதன்மை மேலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற உள்ள இந்த மாபெரும் கடன் முகாமில், அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கான கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் திட்டங்கள், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.