மேட்டுப்பாளையத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை, மருதூர், திம்மம்பாளையம், கண்டியுர், வெள்ளியங்காடு, தோலம்பாளைம், தேக்கம்பட்டி ஆதிமாதையனூர், கணுவாய்ப்பாளையம், இடுகம்பாளையம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம், தோலம்பாளைம் உள்ளிட்ட பகுதியில் கத்தரி, வெண்டை, பாவக்காய், சுரக்காய், தக்காளி, சின்னவெங்காயம், அவரை உள்ளிட்ட காய்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. மழை, பனி என சீதோசன நிலை மாறி மாறி வருவதால் தக்காளியில் புள்ளி விழுந்து அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 1 வாரத்திற்கு முன் வரத்து அதிகரிப்பால் 25 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது, இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர்.

இதனிடையே கடந்த 2 நாட்களாக தொடர் மழை காரணமாக செடியிலேயே தக்காளி அழுகி வருதவால் வரத்து குறைந்தது. இதனால் தற்போது 25  கிலோ எடை கொண்ட தக்காளி கூடை ரூ.730 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களிலேயே 1 கிலோ தக்காளி ரூ.32-க்கு சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.