மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர், புத்தூர் பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருக்க முடியாமல் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து பாதிப்புகளை ஆய்வு செய்து முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி ஆறுதல் கூறினார்.

பின்னர், இலவச வேட்டி, சேலை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் அரிசிகளை வழங்கினார்.