விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் முதல் 3 கையெழுத்துகள்

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வரிசையில் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்ததாக 10-வது இடம் உதயநிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது அலுவலகத்தில், 2022-23 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான கபடிப் போட்டி நடத்துவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

மேலும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6000 உதவித்தொகை வழங்கவும் கையெழுத்திட்டார்.