பாடகி ராஜலக்ஷ்மி நடிக்கும் லைசன்ஸ் பட துவக்க விழா

சூப்பர் சிங்கரில் தனது நாட்டுப்புற பாடல்கள் மூலம் அறிமுகமான ராஜலக்ஷ்மி செந்தில் தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருகிறார். நாட்டுப்புற பாடல்கள் வழியாக ரசிகர்களை ஈர்த்த இவர், தற்போது சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தற்போது ராஜலக்ஷ்மி செந்தில் நடிக்கும் ‘லைசன்ஸ்’ படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாரி ஐ.பி.எஸ் கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் முரளிதரன், ரிவர் என்.ஜி.ஓ நிறுவனர் மது சரண்வேல், ஹீரோ ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்குகிறார்.
இவர் கவுண்டமணி நடித்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை – மகள் இடையே உள்ள பாசப் போராட்டத்தையும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கும் படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தில் ராதாரவி, விஜய் பாரத், கீதா கைலாசம் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.